Tamilnadu
தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி மறைவை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
இதனையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலி என சட்டப்பேரவைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்.
ஆகையால் நாங்குநேரி தொகுதி காலியானதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது விக்கிரவாண்டி தொகுதியும் காலி என அறிவிக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் 232 தொகுதிகள் உள்ளன.
எனவே, நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு