Tamilnadu
சென்னையில் ஜூன் 20-க்கு பிறகு மழைக்கு வாய்ப்பு : தமிழ்நாடு வெதர்மேன் தகவல் !
தமிழகத்தில், கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தில் மழை எப்போது பெய்யும் என விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் ஜூன் 20ம் தேதிக்குப் பின்னர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "சென்னையில் மழை பெய்து 191 நாட்கள் ஆகிவிட்டன. 200 நாட்கள் மழையற்ற மாவட்டமாக இருக்காது. வரும் ஜூன் 20ம் தேதிக்குப் பின்னர் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ஏன் இவ்வளவு உஷ்னமாக இருக்கிறது என யோசிக்கிறீர்களா? ஒருநாளில் 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் மேற்கிலிருந்து வறண்ட காற்று வீசுகிறது. கடலில் இருந்து நிலப்பரப்புக்கு வலுவான காற்று வருவதில்லை. இதனால், மழைமேகம் கூடுவது கிடையாது. மேற்கு மற்றும் வடமேற்கில் இருந்து வாரும் வறண்ட காற்றும், தென் மேற்கு பருவமழைக் காற்றில் போதிய ஈரப்பதம் இல்லாமல் இருப்பதும் சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லாமல் வைத்திருக்கிறது. இந்த நிலை ஜூன் 21-க்குப் பின்னர் மாறும் எனத் தெரிகிறது. இருந்தாலும், வெப்பம் குறையும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
சென்னையைப் பொறுத்தவரை மே மாதத்தைவிடக் கொடுமையானது ஜூன் மாதமே. மரங்களால் மழையை வரவழைக்க வைக்க முடியாது. ஆனால் மரங்களால் கொடுமையான வெயில் நாளைக்கூட குளிர்ச்சியாக்க முடியும். மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பெய்யும் மழையால் சென்னையின் தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்துவிடும் என நினைக்காதீர்கள். ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பெய்யும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்காது " இவ்வாறுக் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!