Tamilnadu
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட மாத்திரையில் கம்பி : பொதுமக்கள் அதிர்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட ஏறான்துறை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டி மற்றும் அவரது மனைவி சக்தி இருவருக்கும் உடல்நலம் குன்றியதால், சிகிச்சைக்காக ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். செவிலியர்கள் சக்தியை பரிசோதித்து மாத்திரை வழங்கினர்.
தனக்கு வழங்கப்பட்ட மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றபோது அதில் சிறிய அளவிலான ஊசி இருந்ததை கண்டு சக்தி அதிர்ச்சியடைந்தார்.
மாத்திரையை உடைக்காமல் சக்தி அதனை உட்கொண்டிருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும். மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளை மக்களி அச்சக் கண்ணோடு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!