Tamilnadu

சுரங்க தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு : 10,000-ற்கும் மேற்பட்ட பழங்குடியினர் போராட்டம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பைதில்லா மலைப்பகுதியில் சுமார் 326 மீட்டர் பரப்பளவில் இரும்பு வளம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இரும்பு வளங்களை எடுப்பதற்கு மத்திய அரசும் அம்மாநில அரசும் அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் அதனைப் பெருட்படுத்தாமல் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்கனவே இந்தப் பகுதியில் இரண்டு சுரங்கங்கள் அமைத்து பணிகள் நடைபெறுவதாகவும் கூறுகின்றனர். இந்த மலைப் பகுதியில் ஏரளமான கிராமங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தினால் வனவிலங்குகள் அச்சத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்துவிடுகிறது.

மேலும் அங்கு வசிக்கும் மக்களை அரசாங்கம் விரட்டியடிக்கும் செயலை மேற்கொள்கிறது. இந்நிலையில், அப்பகுதியில் மூன்றாவதாக ஒரு புதிய சுரங்கம் அமைக்க முயற்சிப்பது பழங்குடியின மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசின் நடவடிக்கையைக் கண்டித்து அப்பகுதி பழங்குடியின மக்கள் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு அந்தப் பகுதியின் பழங்குடியினர் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்கள் ஆலையின் வாசலில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், “இந்த நிலங்களை பாதுகாக்கவேண்டிய அரசே இந்த நிலங்களை வெட்டி லாபத்திற்காக கூறுபோடுகிறது. நிலங்களை பாதுகாக்கும் எங்களை தீவிரவாதிகள் போல் நடத்துக்கிறார்கள். முன்பு உள்ள இரண்டு சுரங்கத்தினால் வன விலங்குகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பழங்குடி மக்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

அதானி நிறுவனத்திற்கு எதிராக போராடும் எங்களை மாநில அரசு ஒடுக்க நினைக்கிறது. மேலும் இந்தப் போராட்டத்திற்கு மாவோயிஸ்ட்கள் தலைமைத் தாங்குவதாக பொய் குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். என்று தெரிவித்தார்.