Tamilnadu
புதுச்சேரி சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்றார்.!
புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் சட்டப்பேரவைத் தலைவர் இடம் காலியானது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றம், அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் இன்று காலை கூடியது. அப்போது சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.பி. சிவக்கொழுந்து சிவக்கொழுந்து பதவியேற்றார்.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளில் சபாநாயகாரக சிவக்கொழுந்து பதவியேற்றது சிறப்பு வாய்ந்தவையாகும் என முதலமைச்சர் நாராயணசாமியும், பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சட்டப்பேரவையில் பேசினர்.
பின்னர், பேரவையில் கலைஞர் கருணாநிதியை புகழ்ந்து முதலமைச்சர், அமைச்சர்கள் பேசினர்.
இதனையடுத்து, காலை 9.40க்கு தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை காலை 10.40 வரை நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையை அவைத்தலைவர் சிவக்கொழுந்து ஒத்திவைத்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!