Tamilnadu

‘துப்பட்டா’ போட ஆணை : எதிர்ப்பை அடுத்து விதிகளைத் தளர்த்திய தமிழக அரசு !

முன்னதாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு குறித்து அ.தி.மு.க அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், "அரசு அலுவலகங்களுக்கு வரும் பெண்கள் சேலை, சுடிதார் மற்றும் சல்வார் ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். குறிப்பாக சுடிதார், சல்வாருடன் கட்டாயம் துப்பட்டா அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதேபோல், ஆண்கள் சாதாரண பேண்ட் சட்டை அல்லது கோட் அணிந்து வரலாம் என்றும், அடர் நிற ஆடைகளோ, டீ.சர்ட்களோ அணியக் கூடாது என்றும் கெடுபிடி தந்துள்ளது.

பெண்கள் அணியும் ஆடையால் மற்றவர்கள் ஈர்க்கப்பட்டு கவனச் சிதறலை ஏற்படுத்தும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் மீண்டும் ஆடை கட்டுப்பாடு குறித்து மற்றொரு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதில் முன்பு இருந்த அறிக்கையையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதன்படி, "தலைமைச் செயலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் சட்டை, பேண்ட் அல்லது தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்தியப் பாரம்பரிய ஆடையான வேஷ்டி அணிந்து வரலாம், ஆனால் டீ-சர்ட் போன்ற ஆடைகளை அணியக்கூடாது" என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.