Tamilnadu
8 வழிச்சாலை அமைக்க அதிமுக அரசு துடித்தால் மக்கள் பாடம் புகட்டுவர் - விவசாயிகள் எச்சரிக்கை!
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இதற்கு மாநிலத்தில் உள்ள அதிமுக அரசுன் துணைபோகின்றது
எனவே, எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி துடித்தால், மக்களவைத் தேர்தலில் எப்படி அவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டதோ அதேபோல், சட்டமன்றத் தேர்தலிலும் பாடம் கற்பிக்கப்படும் என விவசாயிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
மேலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து மக்களுக்கு எதிரான எட்டு வழிச்சாலையை நிறைவேற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் விவசாயிகளுக்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பு, பொதுமக்களும், விவசாயிகளும் தான் முக்கியம். நானும் ஒரு விவசாயிதான். விவசாயத்தை அழிக்கும் வகையிலான எந்த திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம் என மேடைக்கு மேடை பேசிய எடப்பாடி பழனிசாமியின் உண்மையான முகம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்
இதனையடுத்து, எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற ஜூன் 4ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலிவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?