Tamilnadu
தமிழகத்துக்கான நீரை திறக்க ஆணையிடுமா காவிரி மேலாண்மை ஆணையம்?
தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா இடையே நிலவும் காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமும், குழுவும் மாதத்திற்கு ஒருமுறை கூடி தமிழகத்துக்கு சேரவேண்டிய நீர் திறப்பு குறித்து ஆய்வு செய்து உத்தரவிட வேண்டும்
ஆனால், கடந்த 5 மாதங்களாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் விதித்திருந்த நிலையில், கடந்த மே 23ம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், தமிழகத்துக்கான நீரை திறந்துவிட வேண்டும் என்றக் கோரிக்கையை கர்நாடகா நிராகரித்தது. இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் உசேன் தலைமையிலான காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் இன்று கூடுகிறது.
இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கான 9.2 டி.எம்.சி. நீரை ஜூன் மாதம் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு