Tamilnadu
வடக்கே ஆதரவு பெற்ற பா.ஜ.க : தெற்கில் அடித்து விரட்டும் தமிழகம் !
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது முடிந்துள்ளது.
மே 19-ம் தேதி தேர்தல் வாக்கு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து தற்பொழுது வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி உள்ளது. முதல் சுற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. நாடுமுழுவதும் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது.
அதன்படி காலை 10 மணி நிலவரப்படி, 326 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 106 இடங்களிலும், மற்றவை 110 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க 36 இடங்களிலும் அ.தி.மு.க 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலவரப்படி, பா.ஜ.க.,விற்கு இந்தியாவில் பல மாநிலங்கள் ஆதரவு அளித்து இருந்தாலும், தமிழகத்தில் எப்போதுமே gobackmodi தான் உச்சத்தில் இருக்கிறது. இந்தியாவின் நிலைமைக்கும் தமிழகத்தின் நிலைமைக்கும் அப்படியே வேறுமாதிரியாக உள்ளது என்று இந்தத் தேர்தல் முடிவு காட்டியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 2 இடங்களில் தான் அ.தி.மு.க கூட்டணி வந்துள்ளது. அதே போல் தமிழகத்தில் பா.ஜ.க.,விற்கு இந்த முறை ஒரு எம்.பி கூட இருக்கமாட்டார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்தியா முழுவதும் மோடி, பா.ஜ.க அலை வீசுவதால் மிகப்பெரிய வெற்றி அடையலாம் என்றும், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்றிவிடலாம் என்றும் பா.ஜ.க போட்ட திட்டம் பலிக்கவில்லை. அதற்குக் காரணம் நூற்றாண்டு தாண்டியும் இங்கு வேர் பரப்பி இருக்கும் திராவிட இயக்கமும், சுயமரியாதையை மக்கள் மனதில் விதைத்துச் சென்ற பெரியாரும்தான்.
பெரியார் பரப்பிய அந்த திராவிடச் சிந்தனைகளை வளர்த்தது தி.மு.க. தமிழ் மண்ணில் தி.மு.க இருக்கும்வரை பா.ஜ.க.,வால் இங்கு வெற்றியின் நுனியைக் கூட ருசிக்க முடியாது.
நன்றி : படம் - மணிகண்டன் ஆறுமுகம்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!