Tamilnadu
தம்பிதுரையை பின்னுக்குத் தள்ளிய ஜோதிமணி - அசத்தும் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்கள்
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும் சிறப்பான முன்னிலையை பெற்று வருகின்றனர்.
அதன்படி தற்போதைய நிலவரப்படி, கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 35,110 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை 15,447 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். உள்ளார்.
இதேபோல் திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுகரசர் 4,10,687 வாக்கு வித்தியாத்தில் முன்னிலையில் உள்ளார். திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசரின் வெற்றி உறுதியாகியுள்ளது.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் 3,62,372 வாக்கு வித்தியாத்தில் முன்னிலை வகிக்கின்றார்.
கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணனை எதிர்த்து பேட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தக் குமார் 1,49,314 வாக்கு வித்தியாத்தில் முன்னிலை வகிக்கின்றார். தி.மு.க கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!