Tamilnadu
சுகாதாரத் துறை அமைச்சரின் பங்கோடு அரசு மருத்துவமனைகளில் தலைவிரித்தாடும் ஊழல் !
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் , 70 மருத்துவமனைகளில் 35 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பணியாளர்களை குறைவாக பணி அமர்த்தி விட்டு, அதிகமான ஊழியர்கள் வேலை செய்வது போல் போலியான கணக்கு காட்டி பணத்தை கொள்ளை அடித்து வருவது அம்பலமாகியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாப்பாளர் வேலைகளை தனியார் நிறுவனமான பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனத்திற்கு விதிகளை மீறி டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவின் நெருங்கிய உறவினர் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மருத்துவமனைகளில் நடக்கும் இந்த ஊழல், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் துணையோடு நடைபெற்று வருகிறது. இதற்கு மேலாவது லஞ்ச ஒழிப்புத்துறை விழித்துக்கொண்டு, ராம்மோகன் ராவ், பத்மாவதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழலுக்கு உடந்தையாக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!