Tamilnadu

கன்னிப் பெண்களுக்கு ‘சிலம்பு கழி நோன்பு’ நடத்திய தமிழர் மரபு! | தமிழும் மரபும்

ஒரு குழந்தை பிறந்த சில நாட்களுக்கு பிறகு அதற்கு மொட்டை அடிப்பது காது குத்துவது போன்ற பல விழாக்களை நாம் பாரம்பரியமாக பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இதேபோல அக்காலத்தில் சிலம்பு கழி நோன்பு என்ற ஒரு விழாவும் பின்பற்றப்பட்டது. இது மட்டுமின்றி இந்த சிலம்பு என்பது காலில் அணியக்கூடிய ஒரு சாதாரண பொருளாக மட்டுமில்லாமல், நம் தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம் என்னும் ஒரு நூல் உருவாகுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சிலம்பின் பெருமைகளைப் பற்றி தமிழும் மரபும் என்னும் இந்தத் தொகுப்பில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் முனைவர் பேச்சிமுத்து.