Tamilnadu

தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

தென் தமிழகத்தின் நிலப்பரப்பிலும், தெற்கு உள் கர்நாடக பகுதியிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும், மேற்கு உள் தமிழகத்திலும், தென் தமிழகத்திலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்குறிப்பிட்ட பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் 29-37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், தருமபுரி மாரண்டஹள்ளியில் 5 செ.மீ., மற்றும் திருப்பூர் காங்கேயத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.