Tamilnadu
வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுவது எப்போது? - சத்ய பிரதா விளக்கம் !
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு கடந்த மாதம் ஏப்.,18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவிடம் வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படுவது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தப்படுவது குறித்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.
மேலும் பேசிய அவர், மே 23ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, தேர்தல் அலுவலர்களுக்கு தக்க பயிற்சி வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 கம்பெனி பாதுகாப்பு படை கேட்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு