Tamilnadu

சத்யபிரதா சாஹூ தேர்தல் அதிகாரியாக நீடிப்பது சரியல்ல : திருமாவளவன்

தமிழகத்தில் கடந்த ஏப்.,18-ம் தேதி 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19-ம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதில், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சதிய பிரதா சாகு

இது குறித்து விடுதலைகள் சிறுத்தைக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; “பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை தேர்தல் ஆணையம் எற்க மறுத்துள்ளது. இந்த விசயம் அதிர்ச்சி அளிக்கிறது. சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடியிருக்கின்றோம், வரும் திங்கள் கிழமை நாங்கள் தொடுத்துள்ள வழக்கு விசாரனைக்கு வருகிறது. 13 மாவட்டங்களில் 46 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றப் போது குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்தல் அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளர். அப்படியென்றால் 46 இடங்களிலும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்றுதானே உத்தரவு அளித்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் பலத்த சந்தேகத்தை அளிக்கிறது.

ஆளும் கட்சிகளுக்கு சாதகமாகவே அனைத்து முடிவுகளையும், நிலைபாடுகளையும் எடுப்பதாக தெரிகிறது. தபால் ஓட்டுகள் 100 சதவீதம் வாக்களார்களுக்கு அனுப்படவில்லை. திட்டமிட்டு அதிகாரிகள் அதனை முடக்கி வைத்திருக்கிறார்கள். 60சவீதவிதம் மட்டும்தான் தபால் ஒட்டுகள் அனுப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் 40 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். அதற்கு தேர்தல் அளித்த பதில் எற்புடையதாக இல்லை. வாக்கு இயந்திரங்களை மறுவாக்குப்பதிவிற்காக எடுத்துச் சென்றிருந்தால் தர்மபுரிக்கும் சென்றிக்கவேண்டும். ஆனால் அங்கு மட்டும் செல்வதற்கு காரணம் என்னவாக இருக்கும்.

ஆகவே இதுவும் சந்தேகத்திற்கு இடமளிக்ககூடியதாக இருக்கிறது. வாக்கு பதிவு இயந்திரத்தை எதோ தில்லுமுல்லு செய்யப்போகிறார்கள் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அந்த பணியில் தொடர்ந்து நீடிப்பது அவ்வளவு நியாயமானத்தில்லை. ஆகவே அவரை மாற்றி அந்த இடத்திற்கு வேறு ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்”. என அவர் தெரிவித்தார்.