Tamilnadu

17 வருடங்களாக மரணப் போராட்டம்... 50-க்கும் மேற்பட்ட கலைகளைக் கற்று அசத்தும் ஏஞ்சலின்!

கடலூரைச் சேர்ந்த ஏஞ்சலின் ஷெரிலின், பிறப்பிலேயே அட்ரினல் சுரப்பி இல்லாதவர். 17 வருடங்களாக மரணத்துடன் போராடி வாழும் ஷெரிலின், நடனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலக சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார்.

சிறு பிரச்னைகளுக்குத் துவண்டுபோகும் வெகு மனிதர்களிடையே, ஏஞ்சலின் ஷெரிலின் பெரும் நம்பிக்கை விதைக்கும் பெண். 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலைகளில் அசத்தும் ஏஞ்சலினுக்கு தினந்தினம் உடலளவில் பெரும் சோதனைகள்.

பிறப்பிலேயே அட்ரினலின் சுரப்பி இல்லாததால் உடலில் உப்பு தங்காது. உப்புச் சக்தியை சீராக்கி, உடல் சமநிலை பேணும் அட்ரினல் சுரப்பி இல்லாததால் கிட்னி உடனுக்குடன் உப்புச் சக்தியை வெளியேற்றிவிடும். இதைத் தடுக்க தினசரி ஸ்டெராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார் ஏஞ்சலின்.

சராசரி குழந்தைகளைப் போலான வாழ்க்கையை வாழ்வதற்கு தலைகீழாக உருளவேண்டிய நிலையில், 50-க்கும் மேற்பட்ட கலைகளைக் கற்று கலக்கி வருகிறார் இவர். சிறகுகள் நடனப்பள்ளி இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார்.

உலக சாதனைகளை நிகழ்த்தி வரும் ஷெரிலின் இன்னும் பல சாதனைகளைப் படைக்க தடையாய் இருப்பது கழுத்தைப் பிடிக்கும் மருத்துவச் செலவுகளே. நல்மனிதர்களின் உதவி அவர் மென்மேலும் சாதனை படைக்க ஊக்கமாய் இருக்கும்.

ஏஞ்சலின் ஷெரிலினுக்கு உதவ நினைப்பவர்கள் இந்த எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும் : 9677007674