Tamilnadu

விவசாய பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஓ.என்.ஜி.சி , வேதாந்தா, ஹைட்ரோ கார்பன் குறித்து தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

வேதாந்தா, ஓ.என்.ஜி.சி 40 எண்ணெய் கிணறுகள் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.அதனை தடுக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தலைமை செயலாளரிடம் அது குறித்து மனு கொடுத்துள்ளோம்.

உபரி நீரையும் தடுக்கும் பொருட்டு காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி முயல்கிறார் என குற்றம் சாட்டிய அவர், ராசிமனலில் புதிய அணை தமிழகத்துக்காக கட்ட வேண்டும் அதன் மூலம் தண்ணீர் மற்றும் விவசாய பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.