Tamilnadu
வறண்டு வரும் நீர் ஆதாரங்கள்:குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கப்போகும் சென்னை!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி ஏரி,சோழவரம் ஏரி, புழல் ஏரி,செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை திருவள்ளூர் மாவட்டத்தில் தான் உள்ளன.இந்த ஏரிகளின் மூலம் தான் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை முற்றிலும் பொய்த்த நிலையில் இந்த ஆண்டும் பருவ மழை பெய்யாத காரணத்தினாலும்,பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாத காரணத்தால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 6 டி.எம்.சி தண்ணீர் இரண்டு தவணைகளாக தமிழகத்திற்கு திறந்துவிடப்பட வேண்டும் ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முறையாக பேசி உரிய தண்ணீரைப் பெற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்னிலையில் இந்த தவனைக்கான 3 டி.எம்.சி தண்ணீரில் ஒரு டி.எம்.சி.தண்ணீர் கூட ஆந்திராவிலிருந்து தமிழகம் வரவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் கடந்த 01.11.18.முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரியிலிருந்து சென்னைக்கு அனுப்பபட்டு வந்த தன்ணீர் நிறுத்தப்பட்டது.3231 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவைக் கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது 189 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 10 மில்லியன் கன அடி நீர் மட்டுமே உள்ளது.3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் எரியில் தற்போது 119 மில்லியன் கன அடி தண்ணீரே இருப்பு உள்ளது.இந்த ஏரியிலிருந்து சென்னை குடி நீருக்கு வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 15 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
கால்வாய்களை அதிமுக அரசு சரியாக தூர் வாரத காரணத்தினால் மழை காலங்களில் ஏரிக்கு வரவேண்டிய தண்ணீர் வீணாக சென்ற காரணத்தினாலும் மழைக்காலங்களில் பூண்டி ஏரியிலிருந்து ஷட்டர்கள் மூலம் வீணாக தண்ணீர் கசிந்து வெளியேறியதாலும் பூண்டி ஏரியில் தண்ணீர் குறைந்ததற்கு காரணம்.தற்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீரை கொண்டு ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே சென்னை மக்களின் குடிநீருக்கு பயன்படும் என்பதால் வரும் மாதங்களில் பயங்கர குடிநீர் தட்டுப்பாட்டை சென்னை சந்திக்கும் என்பதே உண்மை.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?