Tamilnadu
மெட்ரோ ஊழியர்கள் கோரிக்கையை ஏற்க நிர்வாகம் மறுப்பு: நாளை மீண்டும் பேச்சுவார்த்தை!
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் விதிகளுக்குப் புறம்பாகச் சங்கம் தொடங்கியதாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அந்நிறுவன ஊழியர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரியும், சென்னை மெட்ரோ ரயில் சேவையின் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வெளி நபருக்கு வழங்குவதை எதிர்த்தும், அதிகநேரம் பணிசெய்யுமாறு கட்டாயப்படுத்துவதை எதிர்த்தும், ஊதிய உயர்வு வேண்டும் எனக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர்.
மெட்ரோ பணியாளர்கள் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை, சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தில் துவங்கியது.
இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சிஐடியூ தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 4 மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க மறுப்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அ.சௌந்தரராஜன், “சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் 36 ரயில்கள் இயங்கவேண்டிய இடத்தில் 6 ரயில்கள் மட்டுமே இயங்குகிறது. 7 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் நிலைமை மாறி 30 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மிகுந்த அக்கறையோடு இருக்கிறோம். இந்த நிலைமைக்கு மெட்ரோ ரயில் நிர்வாகமே காரணம், நிர்வாகம் தொழிலாளர்களைப் பழிவாங்கும் நினைக்கிறது. எனவே பேச்சுவார்த்தை நாளையும் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!