Tamilnadu

தொழிற்சங்கம் அமைத்த காரணத்திற்காக பணி நீக்கம் செய்வதா?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

தொழிற்சங்கம் அமைத்த காரணத்திற்காக மெட்ரோ ரயில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

“சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு  ஜூன் மாதத்திலிருந்து  வழங்கவேண்டிய படியை  30 சதவிகிதம் குறைத்துள்ளது குறித்தும், வேறு பல கோரிக்கைகள்  குறித்தும் நிர்வாகத்திற்கு  7 சங்க நிர்வாகிகள் உட்பட கடிதம் எழுதியதற்காக  எந்த  முன்னறிவிப்புமின்றி 8 ஊழியர்களை  நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனைக் கண்டித்து  ஊழியர்கள், நேற்றிலிருந்து  குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த  தொழிலாளர் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக  கண்டிக்கிறது.

மேலும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்தில்ஈடுபடுவதால், பயிற்சி பெறாதவர்களை வைத்துமெட்ரோ ரயில்களை இயக்குவதால் பயணிகளின்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக மெட்ரோ  சேவை முற்றிலும் பாதித்து பயணிகள்பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எனவே, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஊழியர்களின்  போராட்டத்தை ஒடுக்க நினைக்காமல்,  போராடும்  ஊழியர்களை உடனடியாக அழைத்து  பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின்  நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூகத் தீர்வு  காணவேண்டுமெனவும்,

பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பேரை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் எனவும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை  அனுமதிக்க  வேண்டுமெனவும்,  மெட்ரோ ரயில் போக்குவரத்து  சீராக்கவும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேணடும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  மெட்ரோ ரயில் நிர்வாகத்தையும் , மத்திய, மாநில அரசுகளையும் கேட்டுக் கொள்கிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.