Tamilnadu

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!

ஈஸ்டர் தினத்தன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படையினர் குறிவைத்து தாக்குதலை நடத்தினர். 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தாக்குதல் நடைபெற்று 5 நாட்களுக்கு மேலாகியும் இலங்கையில் பதற்றம் குறையவில்லை.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனைப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உடைமைகள் முழுமையான சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் கடலோர எல்லைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்படுகளை கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் மற்றும் இந்திய கப்பல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய தேவாலயங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுகள் செய்யட்டுள்ளதாக தகவல் வெளிவருகின்றன.