Tamilnadu
பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்
ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
சிலைக்கடத்தல் வழக்குகளை பொன்மாணிக்கவேல் விசாரித்து வரும் நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என பலர் இந்த வழக்கில் சிக்கியிருப்பதால் மத்திய பா.ஜ.க அரசின் துணையை நாடும் விதமாக சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.
பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் வழக்கை சிறப்பாகவே கையாண்டு விசாரித்து வருகிறார். எனவே சி.பி.ஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு குழுவில் உள்ள முன்னாள் காவல்துறை அதிகாரிகள் 66 பேர், தங்களுக்கு தக்க பணிகளை நியமிப்பதில்லை என குற்றஞ்சாட்டி பொன்.மாணிக்கவேலின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பொன்.மாணிக்கவேல் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!