File image : Thirumavalavan
Tamilnadu

“தோல்வி பயத்தில் பா.ம.க-வினர் வன்முறை” - திருமாவளவன் குற்றச்சாட்டு!

பா.ம.க-வினர் அராஜகத்தில் ஈடுபட்ட பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்.

கும்பகோணத்தில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டியளித்தபோது தெரிவித்ததாவது,

"பா.ம.க-வினர் அராஜகத்தில் ஈடுபட்ட பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிட இருக்கிறோம். தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவு நடத்தவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தேர்தலுக்கு முன்பே கலவரத்தை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடு பொதுக்கூட்டங்களில் பேசிவந்தார். தேர்தல் நடைபெற்றபோது பொதுமக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையாக வெற்றிபெற்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.

தோல்வி பயத்தால் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் வன்முறைகளை நிகழ்த்தி வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுகளை போட்டுள்ளனர். ஆளும் கட்சிகளின் அராஜகங்களை மீறி தி.மு.க கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும்." எனத் தெரிவித்தார்.