Tamilnadu
+2 : மாணவர்களை விட மாணவியர் 5% அதிக தேர்ச்சி!
தமிழகத்தில் 8.66 லட்சம் மாணவர்கள் எழுதிய +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 5.07% அதிக தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
12-ம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 84.76% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முக்கியப் பாடங்களில் மாணவ - மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பின்வருமாறு :
இயற்பியல் - 93.89%
வேதியியல் - 94.88%
உயிரியல் - 96.05%
கணிதம் - 96.25%
தாவரவியல் - 89.98%
விலங்கியல் - 89.44%
கணக்குப் பதிவியல் - 92.41%
கணினி அறிவியல் - 95.27%
வணிகவியல் - 91.23%
+2 தேர்வு எழுதியோர் ஏப்ரல் 20 முதல் 26-ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !