Sports
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான திகழ்ந்து வருகிறார்.
இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் தொடர்ந்து திகழும் அஸ்வின் 500-க்கும் அதிக விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வாங்கியர்கள் பட்டியலில் ஜாம்பவான் வீரர் முரளிதரனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், அஸ்வின் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயான் கூறியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சந்திக்கவுள்ள நிலையில், இது குறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான், "அஸ்வினுடன் பலதுறை நேருக்கு நேர் எதிர்கொண்டு ஆடியுள்ளேன். அவர் ஒரு நம்பமுடியாத புத்திசாலித்தனமான, அற்புதமான பந்துவீச்சாளர். அவரிடமிருந்து ஏராளமானவற்றை கற்றுகொண்டுள்ளேன்.
அவர் மைதானத்துக்கு ஏற்க தனது பந்துவீச்சை மாற்றுவார். உலகத்தின் சிறந்த பந்துவீச்சாளர்களால் மட்டுமே இதை செய்யமுடியும். அவர் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதற்காக அவர் மிகவும் பெருமைப்பட வேண்டும். இந்த தொடரில் அவர் எப்படி ஆடுவார் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !
-
எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!