Sports
3 - 0... சொந்த மண்ணில் White Wash ஆன இந்தியா : 24 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த துயரம் !
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி எளிதில் வெற்றபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பெங்களுரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து புனேவில் நடைபெற்ற இரண்டு போட்டியிலும் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சிஅளித்தது.
இதன் மூலம் தொடர்ந்து 18 உள்நாட்டு தொடர்களில் தோல்வியே சந்திக்காமல் வலம்வந்த இந்திய அணியின் சாதனைக்கு நியூசிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்து தொடரை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து இறுதிப்போட்டி மும்பையில் நடைபெற்றது.
இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றிக்கு மிக அருகில் வந்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி 3 போட்டிகளிலும் தோற்று பரிதாப நிலைக்கு இந்திய அணி சென்றுள்ளது. மேலும் 24 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் அனைத்து போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இறுதியாக கடந்த 2000-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை இந்திய அணி முற்றிலுமாக இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த மோசமான தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இந்திய அணியின் கனவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!