Sports
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது: வினிசியஸ் ஜூனியரிடமிருந்து மயிரிழையில் நழுவிய 'பாலன் டி ஓர்' விருது
பிரான்ஸ் கால்பந்து சங்கம் ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரருக்கான 'பாலன் டி ஓர்' விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. சர்வதேச கால்பந்து சங்கமும் ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வழங்கி வருகிறது.
என்றாலும் பிரான்ஸ் கால்பந்து சங்கம் வழங்கும் 'பாலன் டி ஓர்' விருதே உலகத்தின் சிறந்த கால்பந்து விருதாக கருதப்படுகிறது. இந்த விருதுக்கு கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கொடுக்கும் வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபடுகிறது.
கடந்த ஆண்டு இந்த விருது கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இந்த விருதுக்கு கடும் போட்டி எழுந்தது. மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஸ்பெயின் அணி வீரர் ரோட்ரி, ரியல் மாட்ரிட் மற்றும் பிரேசில் அணி வீரர் வினிசியஸ் ஜூனியர், ரியல் மாட்ரிட் மற்றும் இங்கிலாந்து அணி வீரர் பெல்லிங்காம் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
அதே நேரம் இன்டெர் மில்லன் மற்றும் அர்ஜென்டினா அணி வீரர் லோட்டாரோ மார்ட்டினஸும் இந்த விருதை வெல்லும் வீரராக கருதப்பட்டார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 'பாலன் டி ஓர்' விருது வழங்கும் விழாவில் இந்த விருது மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஸ்பெயின் அணி வீரர் ரோட்ரிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மான்செஸ்டர் சிட்டி அணிக்காக பிரீமியர் லீக், ஸ்பெயின் அணிக்காக யூரோ கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தததால் சக போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, ரோட்ரி இந்த விருதை வென்றுள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்காக லா லீகா, சாம்பியன்ஸ் ட்ரோபி ஆகிய கோப்பைகளை வினிசியஸ் ஜூனியர் வென்றாலும், கோபா அமெரிக்கா போட்டியில் பிரேசில் அணியின் மோசமான செயல்பாடு காரணமாக வினிசியஸ் ஜூனியர் இந்த விருது மயிரிழையில் நழுவியுள்ளது.
அதே நேரம் மான்செஸ்டர் சிட்டி அணி சார்பில் முதல் முறையாக 'பாலன் டி ஓர்' விருதை வெல்லும் வீரர் என்ற சாதனையை ரோட்ரி பெற்றுள்ளார். மேலும் 1960-ம் ஆண்டுக்கு பிறகு இந்த விருதை வெல்லும் முதல் ஸ்பெயின் வீரர் என்ற சாதனையையும் ரோட்ரி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!