Sports
முதலமைச்சர் கோப்பை 2024 : எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை பதக்கங்கள் வென்றது? - முழு விவரம் !
தமிழ்நாட்டின் உள்ளூர் வீரர்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான (2024) முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஏற்கனவே மாவட்ட, மண்டல அளவில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2024 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 10.09.2024 சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். மாவட்ட, மண்டல அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என மொத்தம் 11,56,566 நபர்கள் 36 வகையான விளையாட்டு போட்டிகளில், 168 பிரிவுகளில் கலந்துக் கொண்டனர்.
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் அக்டோபர் 4-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை, மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெற்ற 33,000 நபர்கள் பங்கு பெறும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை – 2024 போட்டிகள், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் 04.10.2024 சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், குத்துச்சண்டை, ஹாக்கி, கபடி உள்ளிட்ட 25 வகையான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், இதற்கான பிரம்மாண்ட நிறைவு விழா இன்று (அக். 24) சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்டங்கள் உள்ளிட்ட பதக்க பட்டியல் வெளியாகியுள்ளது. இதில்,
சென்னை மாவட்டம், 105 தங்கம் உள்ளிட்ட 254 பதக்கங்களை பெற்று முதலிடமும்,
செங்கல்பட்டு மாவட்டம் 31 தங்கம் உள்ளிட்ட 93 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடமும்,
கோயம்புத்தூர் மாவட்டம் 23 தங்கம் உள்ளிட்ட 102 பதக்கங்களை பெற்று மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.
மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் பதக்கம் பெற்ற மாவட்டங்கள் பட்டியல் வருமாறு :
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!