Sports

T20 உலகக்கோப்பையை வென்றது நியூஸிலாந்து ... இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி அபாரம் !

மகளிர் டி20 உலகக் கோப்பை வங்கதேசத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கு கலவரம் வெடித்து ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி அங்கு அசாதாரண நிலை ஏற்பட்டதால் உலகக்கோப்பை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறிய நிலையில், அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போல நியூஸிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத இரு அணிகள் மோதியதால் முதல் முறையாக கோப்பையை வெல்லும் அணி எது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தொடர்ந்து நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து அணி 0 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அமிலியா கெர் 43 ரன்கள் குவித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதனால் அந்த அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்களை மட்டுமே எடுத்து. இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதல் முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.

Also Read: விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணி! - 3 ஆண்டுகளில் ரூ. 110 கோடி ஊக்கத்தொகை! : துணை முதலமைச்சர் உதயநிதி!