Sports
வரலாற்றில் முதல் முறை... முதல் இன்னிங்சில் 500+ ரன்கள் அடித்தும் தோல்வி... பரிதாப நிலையில் பாகிஸ்தான் !
இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி முல்தான் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 823 குவித்து டிக்ளர் செய்தது. அந்த அணி சார்பில் ஹரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஒரே இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இந்த சாதனையை செய்த இரண்டாவது இங்கிலாந்து ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கிரேம் ஃபோலர் (201) & மைக் கேட்டிங் (207) இருவரும் 1985 இல் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் இப்படி ஒரு சாதனையை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது ஆடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் இருந்தே திணறியது.
இறுதியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெஸ்ட் வரலாற்றில் இதுவரை முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் அடித்த அணி தோல்வியைத் தழுவியதே இல்லை. ஆனால் அந்த மோசமான வரலாற்றுக்கு பாகிஸ்தான் அணி சொந்தமாகிவுள்ளது. அதோடு சொந்த மண்ணில் தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியதோடு சொந்த மண்ணில் 11 போட்டிகளாக வெற்றியே பெற்றதில்லை என்ற மோசமான சாதனையையும் பாகிஸ்தான் அணி படைத்துள்ளது.
Also Read
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !
-
எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
-
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து : பயணிகள் அவதி... விவரம் என்ன ?