Sports
வீரர்களுக்கு 4 மாத சம்பள பாக்கி... கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்... விவரம் என்ன?
பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத சம்பளத்தை வழங்க முடியாத அளவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒருகாலத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளே கிரிக்கெட்டில் கோலோச்சிக்கொண்டிருந்தது. ஆனால், 90களின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத்தொடங்கியது. 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின்னர் இந்திய ரசிகர்களின் கவனம் கிரிக்கெட்டை நோக்கி திரும்பியது.
இதனால் இந்தியா உலக கிரிக்கெட் அரங்கில் முக்கிய சக்தியாக மாறத்தொடங்கியது. இந்தியா பங்கேற்கும் போட்டிகளை காண ரசிகர்கள் குவிந்ததால் இந்தியாவில் கிரிக்கெட் தனது உச்சகட்ட வளர்ச்சியை எட்டத் தொடங்கியது. மேலும், ஐசிசி-க்கு வருமானத்தை அள்ளித் தரும் நாடாகவும் வளர்ச்சி அடைந்தது.
அதே நேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் இதற்கு நேர் எதிர் நிலையில் சென்றுகொண்டுள்ளது. அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் அந்நாட்டில் கிரிக்கெட்டுக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலை உள்ளது.
இந்த நிலையில், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத சம்பளத்தை வழங்க முடியாத அளவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் பாகிஸ்தான் வாரியம் ஒப்பந்தப் பட்டியலில் இருக்கும் முக்கிய வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு 4 மாத ஊதியத்தை நிலுவையில் வைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மகளிர் அணி வீராங்கனைகளுக்கும் கடந்த நான்கு மாதங்களாக இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் கூறியுள்ளளது. அதே நேரம் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதன் காரணமாகவே ஊதியத்தை நிலுவையில் வைத்துள்ளதாகவும், நிதி பிரச்சனை காரணமாக ஊதியம் நிலுவையில் வைக்கப்படவில்லை என்று பாகிஸ்தான் வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !