Sports
34.4 ஓவர்களில் 285 ரன்கள்... சரவெடியாக வெடித்த இந்திய அணி... டெஸ்ட்டை டி20-யாக மாற்றி அதிரடி !
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக செயப்பட்ட இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளும், ஜடேஜா 5 விக்கெட்டுகளும், பும்ரா 5 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். மேலும் அஸ்வின், கில், பண்ட் ஆகியோர் சதமடித்தும் அசத்தினர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டாவது, மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸ்சில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டம் ஆடியது.
களமிறங்கிய அனைத்து இந்திய வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, வெறும் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி ஆட்டநாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் குவித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடியதன் மூலம் இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் விவரம்
ஒரு ஆண்டில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்ஸர்கள் - 96
அதிவேக டீம் 50 (19 பந்துகள்), 100 (62 பந்துகள்), 200 (24.2 ஓவர்கள்)
இந்தியாவுக்கு மூன்றாவது அதிவேக 50 - ஜெய்ஸ்வால் (31 பந்துகள்)
நான்காவது வீரராக 27000 சர்வதேச ரன்களைக் கடந்தார் கோலி
தன் இன்னிங்ஸின் முதலிரு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசிய நான்கு வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா
ஒருவர் டெஸ்ட்டில் 3000+ ரன்கள் & 300 விக்கெட்கள் கடந்த 3வது இந்தியர் ஜடேஜா
Also Read
-
🔴Live|மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?