Sports
“கபில் தேவுக்கு பிறகு பும்ராதான், அவர் ஒரு கோகினூர் வைரம்” - அஸ்வின் புகழாரம் !
ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
பின்னர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது.
ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தி, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.பின்னர் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா கோப்பையை வெல்ல பும்ரா முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இவ்வாறு தனது தொடர் சாதனைகளின் காரணமாக இந்திய ரசிகர்கள் மனதில் விராட் கோலி, ரோஹித் சர்மாக்கு இணையான புகழ்பெற்ற வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் பும்ரா ஒரு கோகினூர் வைரம் என இந்திய வீரர் அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் கபில் தேவுக்கு பிறகு பும்ராவைப் போல ஒரு வெற்றிகரமான பந்துவீச்சாளர் என்று சொல்ல ம் சொல்லட்டும் கபில் தேவுக்கு பிறகு இவ்வளவு வெற்றிகரமானவர்களாக யாராவது வந்திருக்கிறார்களா? பும்ராவை தவிர வேறு யாராவது இருக்கிறார்களா. ?
பும்ரா தன் தோள்களில் மிகப்பெரிய சுமைகளை ஏற்றிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்.இதன் காரணமாக அவர் காயமும் அடைந்தார். ஆனாலும் அதிலிருந்து திரும்பி வந்து மீண்டும் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார் அவர் ஒரு கோகினூர் வைரம்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!