Sports

தீ வைத்து எரித்த முன்னாள் காதலன்... துடிதுடித்து பலியான ஒலிம்பிக் வீராங்கனை ரெபேக்கா - நடந்தது என்ன?

அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தொலைதூர ஓட்டத்தில் கென்யா வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி (Rebecca Cheptegei) இவர் கலந்து கொண்டு 44-வது இடத்தைப் பிடித்தார். இந்த சூழலில் இவரது முன்னாள் காதலன் ரெபெக்காவை தீ வைத்து எரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

வீராங்கனை ரெபேக்கா, டிக்சன் என்டிமா என்பவருக்கும் திருமணம் ஆனதாகவும் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் இவர்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சில காரணங்களுக்காக சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை வாக்குவாதமாக மாற, கைகலப்பாக மாறியுள்ளது.

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ரெபேக்கா மற்றும் அவரது முன்னாள் காதலன் டிக்சனுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த டிக்சன், ரெபேக்கா மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார். தாய் மீது தாக்குதல் நடத்துவதை கண்ட ரெபேக்காவின் மகள் ஒருவர், டிக்சனை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணை, டிக்சன் தாக்கி தள்ளிவிட்டுள்ளார்.

தொடர்ந்து எரிந்து துடிதுடித்து கொண்டிருந்த ரெபேக்காவை மீட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடல் பாகங்கள் முழுவதும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் ரெபேக்காவின் உடலில் 75% முதல் 80% வரை தீக்காயங்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் ரெபேக்காவுக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர், மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்தில் டிக்சனும் காயமடைந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த வீராங்கனை ரெபேக்காவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கென்யாவில் கடந்த 2022-ம் ஆண்டு பஹ்ரைன் தடகள வீராங்கனை டமரிஸ் முத்தி என்பவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து 2023-ல் உகாண்டா ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் பெஞ்சமின் கிப்லாகாட் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "இதை செய்தால் மட்டுமே நமது அணி பாகிஸ்தான் செல்லவேண்டும்" - ஹர்பஜன் சிங் கருத்து !