Sports

பாரிஸ் பாராலிம்பிக் : 3 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீராங்கனைகள்... விவரம் என்ன ?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற மகளிர் SU 5 பாட்மின்டன் அரையிறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனை துளசிமதி சக தமிழக வீராங்கனை மனீஷா ராமதாஸை எதிர்கொண்டார்.

இதில் 23-21, 21-17 என்ற கணக்கில் மனீஷா ராமதாஸை வீழ்த்தி துளசிமதி இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார். தொடர்ந்து நடைபெற்ற வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், டென்மார்க் வீராங்கனை கேத்ரினை மனிஷா ராமதாஸ் 21-12, 21-8 என்ற கணக்கில் வென்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 21-17 , 21-10 என்ற கணக்கில் சீன வீராங்கனை யாங்க் துளசிமதியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதனால் துளசிமதிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. அதே நேரம் இன்று நடைபெற்ற SH6 மகளிர் பாட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த நித்யஸ்ரீ சிவன் இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் தமிழக வீராங்கனைகள் பாராலிம்பிக்கில் 3 பதக்கங்களை வென்றுள்ளனர்.

Also Read: பாரிஸ் ஒலிம்பிக் : 6 பதக்கங்களை மட்டுமே வென்ற இந்தியா... பதக்கம் வென்ற, தவறவிட்ட வீரர்கள் பட்டியல் !