Sports
“இந்திய Motor Sports-ன் தலைநகரம் தமிழ்நாடு...” - வரலாறு குறித்த சுவாரஸ்ய தகவல் !
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமத்தை ஒருங்கிணைத்து Racing Promotions Private Limited உடன் இணைந்து ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்துகிறது. இப்போட்டி ஆகஸ்ட் 31ம் மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதற்கான ஓடுதளம் சென்னையில் தீவுத்திடலையொட்டிய கொடி மரச்சாலையில் தொடங்கி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வரையிலான அண்ணா சாலை, சுவாமி சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கிய 3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தயத்தை 8000 பேர் வரை நேரில் அமர்ந்து பார்க்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கார் பந்தயம் காரணமாக தமிழ்நாட்டில் கார் பந்தைய விளையாட்டு பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பந்தயத்துக்கு நடிகர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். எனினும் அரசின் வளர்ச்சி பிடிக்காத அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த பந்தயத்துக்கு தங்கள் எதிர்ப்பை எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. எதிர்ப்புகள் மட்டுமின்றி, சில அவதூறுகளையும் பரப்பி வருகிறது.
இந்த நிலையில் Dhans என்ற பெயர்கொண்ட இணையவாசி ஒருவர், "இந்திய மோட்டார் ஸ்போர்ட்டின் தலைநகரம் தமிழ்நாடு என்றும் சொல்லலாம்" என்ற தலைப்பில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவு வருமாறு :
1960-களின் ஆரம்பத்தில் சோழாவரம்ல பழைய ஏர் பீலடில் நடக்கும் ரேஸ்கள் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஏர் பீல்டை ரேசுக்கு பயன்படுத்தினார்கள். அதுதான் தமிழ்நாட்டின் மோட்டார் ஸ்போர்ட்டுக்கு முதல் படி, அப்போதிருந்தே நாம் இந்த களத்தில் முதலிடத்தில் இருந்தோம். பிப்ரவரி மாதம் முதல் இரண்டு வாரக்கடைசியில் ரேஸ்கள் நடைபெறும்.
1970-களில் கிட்டத்தட்ட 70,000 பேர் வரை மோட்டார் ரேஸ் பார்க்க இங்க கூடுவார்கள். 70-களின் இறுதியில் அன்றைய தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் சோழவரம் ரேசை பார்க்க கலந்து கொண்டு ஸ்டாப் வாட்ச் வைத்து டைம் நோட் பண்ணுவாராம். ரேஸ்களை கொடியசைத்து துவக்கி வைக்க சொல்லியபோது, ரேஸ் ஓட்டுநர்கள் மிகவும் concentration உடன் தயாராகி இருப்பார்கள், என்னைப்போல் ஒருவர் துவக்கி வைப்பது அவர்கள் கவனத்தை திசை திருப்பும் அதனால் வேண்டாம் என மறுத்தவர் என்பார்கள்.
அவர் தோன்றி வைத்த அதிமுக கட்சி இன்று கார் ரேஸை சென்னையில் நடத்த எதிர்க்கிறது என்பது அவரோட கட்சி இப்ப கட்சியோட & தமிழ்நாட்டோட வரலாறு தெரியாதவர்கள் கையில் சிக்கியுள்ளதை காட்டுகிறது.
1980கள் வரை அங்கு ரேஸ்கள் நடந்தன. மற்ற நாடுகளில் இருந்தெல்லாம் வருவாங்க ரேஸ்ல கலந்துக்க. இந்தியாவின் ரேசிங் திருவிழா சோழாவரம் ரேசிங். அப்புறம் அங்கிருந்து இருங்காட்டுகோட்டைல MMRT& கோயமுத்தூர் Kari motor way என இரண்டு ட்ராக்குகள் வந்தன.
இந்தியாவுல மொத்தம் ரெண்டு ட்ராக் இருந்துச்சு, சென்னையில் ஒன்று கோயம்புத்தூரில் ஒன்று என. அப்புறம் buddh இண்டர்நேஷனல் ட்ராக் என டெல்லில பார்முலா 1 நடத்தும் அளவுக்கு சர்வதேச ட்ராக் ஒன்னு வந்துச்சு.. அங்க பார்முலா ஒன் ரேசும் 2011-2013 மூன்று வருடங்கள் நடந்தது, அப்புறம் இந்திய அரசாங்கம் அதிகமாக டாக்ஸ் போடுறாங்க என சொல்லி 2014ல அது நிறுத்தப்பட்டது. சென்ற வருடம் மோட்டோ ஜி பி இண்டர்நேஷனல் பைக் ரேஸ் அங்க நடந்துச்சு. ஃபார்முலா 1 ரேஸ் நடந்தா கூடவே அங்கே சப்போர்ட் ரேஸ்களாக பார்முலா 2 வும் நடக்கும்.
இந்த ட்ராக்கோட சேர்த்து இந்தியாவில் மூன்றாக இருந்தது. இதுவரை மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்றால் தமிழ்நாட்டில் அதற்கான மிகப்பெரிய இடம் இருந்தது.
கடந்த பத்து வருடங்களில் அது குறைந்து மற்ற நகரங்கள்/ மாநிலங்கள் வளர துவங்கின. இப்ப ஹைதராபாத் ஸ்ட்ரீட் சர்க்யூட் ஏற்கனவே வந்துருச்சு..
அடுத்து ஆந்திராவில் ஒரு டிராக்கும் தெலுங்கானாவில் ஒரு டிராக்கும் ரெடியாகிறது. கர்நாடகாவில் ஒரு ட்ராக்கும், மஹாராஷ்டிராவில் ஒரு ட்ராக்கும் ரெடியாகிறது. கோயம்புத்தூரில் இன்னொரு ட்ராக் (COASTT) ரெடி ஆகிவிட்டது. ரேஸ்கள் நடக்க துவங்கியுள்ளது கூடவே கோ கார்ட்டிங் வார இறுதியில் இருக்கு.
அதிகம் ரேஸ் ட்ராக் உள்ள மாநிலம் தமிழ்நாடு, மோட்டார் ஸ்போர்ட்ஸ்ல நமக்கென்று ஒரு தனி இடம் உள்ளது, கூடவே தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் கம்பெனிகளும் நிறைய உள்ளன. நம் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அதிலிருந்து மேலே போக வேண்டும். அதுக்கான அடுத்தகட்டம்தான் பார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட்.
மோட்டார் ஸ்போர்டை பின்தொடர்பவர்களுக்கு இதோட வளர்ச்சி புரியும், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம். நெட் ப்ளிக்ஸ்ல drive to survive என்ற சீரிஸ் Formula 1 ரேஸின் அடிப்படையில் இருக்கு. அதைப் பார்த்துட்டு அதற்குப் பிறகு ஃபார்முலா ஒன் ரேசிங்கை பின் தொடர்பவர்கள் அதிகம்.
தமிழ்நாட்டின் motor sport வரலாறு அறியாதவர்கள் தயவுசெய்து படிச்சு தெரிஞ்சுக்கலாம். கூகிள்ல நிறைய ஆர்டிகிள் & வீடியோக்கள் உண்டு. Tamilnadu has a history and heritage in motor racing. I think That made us special in the automobile industry also." என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!