Sports
"நம்மை எப்போது அணியிலிருந்து தூக்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்" - அஸ்வினை பாராட்டிய ஸ்ரீகாந்த் !
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான திகழ்ந்து வருகிறார்.
இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர் என சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்டார் அஸ்வின்.
எனினும் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறனை வெளிப்படுத்தி கடந்த உலகக்கோப்பை டி20 தொடர், மற்றும் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் என இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தினார். அதிலும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாகவே செயல்பட்டார்.
எனினும் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் தொடர்ந்து திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் 516 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில். தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "அஸ்வின் செய்திருப்பது மாபெரும் சாதனை. இங்கிருந்து ஒருவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. நமது வீரர்கள் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் சொதப்பினால் எப்போது அவனை அணியை விட்டு தூக்கலாம் என்று அனைவரும் காத்துக் கொண்டிருப்பார்கள். அதை எல்லாம் மீறி அஸ்வின் சாதித்துள்ளார்.
பொதுவாக தமக்கு ஏதேனும் அழைப்பிதழ் வந்தால் அதை கிழித்து தூக்கி போட்டு விடுவேன். ஆனால் அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்திய பாராட்டு விழாவிற்கான அழைப்பிதழை நான் நிகழ்ச்சி முடிந்தும் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு சிறு தொடக்கப் புள்ளியாக நான் இருந்ததை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!