Sports
ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்குப் பதிவு : வெளிநாட்டில் விளையாடி வரும் அவர் நாடு திரும்பினால் கைது ?
வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த போராட்டம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக சற்று தணிந்த நிலையில், மீண்டும் போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்தில் தீவிரமடைந்ததை உணர்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு தற்போது பொறுப்பேற்றுள்ள நிலையில், ஷேக் ஹசீனா மீது வங்கதேசத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுட்டள்ளது. அந்த வகையில் வங்கதேசத்தில் உள்ள டாக்காவின் அடபோர் காவல் நிலையத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் கடந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி சார்பில் தேர்தலில் நின்று எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் கொலை வழக்கில் அவரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் 28-வது குற்றவாளியாக ஷாகிப்பின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஷாகிப் அல் ஹசன் தற்போது பாகிஸ்தானில் வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார். தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படலாம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !