Sports
ஒலிம்பிக் போட்டி : வினேஷ் மீது பழியை போடும் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் - அம்பலமாகும் பாஜக உண்மை முகம் !
பாஜக எம்.பியாக இருந்த பிரிஜ் பூஷன் சிங், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார். இந்த சூழலில்தான் தனது பதவியை மிகவும் மோசமாக பயன்படுத்தி, பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார் பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன். ஆரம்பத்தில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது பாஜக அரசு.
இதனால் தங்கள் உரிமைக்காக வீரர்கள் போராட்ட களத்தில் இறங்கினர். கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற இந்த போராட்டம் பல மாதங்களாக நீடித்தது. இந்த போராட்டத்தை ஒன்றிய பாஜக அரசும் கண்டுகொள்ளாமல் இருந்தது. பாஜக அரசு போலீசாரை கட்டவிழ்த்து விட்டு, அடக்க முயற்சித்தது. அந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்தான் தற்போது உலகமே பேசும் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.
இவர் அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அப்போது இவரை நாடே கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், 100 கிராம் எடை கூடியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வீரர்களின் டயட் உள்ளிட்டவையை இந்திய ஒலிம்பிக் சங்கம் முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
தொடர்ந்து ஒரு பக்கம் இதுகுறித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்திய அரசு வழக்கம்போல் வெறும் பம்மாத்து வேலையை மட்டுமே செய்தது. இதனிடையே இதுகுறித்து ஒன்றிய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
இந்த சூழலில் தற்போது ஒலிம்பிக்கில் பதக்கம் போனதற்கு காரணம் போராட்டம்தான் என்று மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ”ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இந்தியா ஆறு பதக்கங்கள் வென்றிருக்க முடியும். ஆனால் கடந்த 15-16 மாதங்களாக நடத்தப்பட்ட போராட்டங்களால் மல்யுத்த பயிற்சி தடைபட்டு, நாம் பல பதக்கங்களை இழந்து விட்டோம்!” என்று பேசினார்.
பெண் வீரர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்து வீரர்கள் போராட்டம் நடத்தியதால்தான் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பறிபோனதாக கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது பாஜக அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே தன்னை பிரிஜ் பூஷன் ஆட்கள் மல்யுத்த போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்வதாக வினேஷ் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சூழலில் பிரிஜ் பூஷன் தீவிர ஆதரவாளரான மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் இவ்வருட தெரிவித்துள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!