Sports
ஊக்க மருந்து சோதனையில் தோல்வி: ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரருக்கு 18 மாதம் தடை... முழு விவரம் என்ன?
இந்தியாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத். ஐந்து வயதில் இடது காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரால் சரியாக நடக்கமுடியாமல் போனது. எனினும் மனம் தளராத அவர் தொடர் பயிற்சி காரணமாக சிறந்த பேட்மிண்டன் வீரராக உருவாகினார்.
மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீரராக ஜொலித்த பிரமோத் பகத் 2015, 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதோடு, 2013ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டையர் பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அதன் உச்சமாக 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் தொடரில் தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்தார். இந்த நிலையில், ஊக்க மருந்து தடுப்பு விதிகளை மீறியதாக அவருக்கு 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் மூன்று முறை ஊக்க மருந்து சோதனையில் பிரமோத் பகத் தோல்வியடைந்த நிலையில், அந்த சோதனையை எதிர்த்து பிரமோத் பகத் சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தற். ஆனால், அவரின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 18 மாதங்கள் தடை விதித்து சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கவுள்ள பாரீஸ் பாராலிம்பிக்ஸ் தொடரில் பிரமோத் பகத்தால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாரீஸ் பாராலிம்பிக்ஸ் தொடரில் பிரமோத் பகத் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதரும் வீரராக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!