Sports

பாரிஸ் ஒலிம்பிக் : 6 பதக்கங்களை மட்டுமே வென்ற இந்தியா... பதக்கம் வென்ற, தவறவிட்ட வீரர்கள் பட்டியல் !

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இங்கு ஒலிம்பிக் தொடரின் இறுதி நாள் என்ற நிலையில், இதுவரை இந்தியா 6 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் 71-வது இடத்தில் உள்ளது.

இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்ற நிலையில்,இந்தியாவின் முதல் பதக்கத்தை 22 வயதான இந்திய வீராங்கனை மனு பாக்கர் வென்று அசத்தினார்.

  • மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றார்.

  • துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர்.

  • ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷ்ன்ஸ் பிரிவில் இறுதிபோட்டியில், ஸ்வப்னிஸ் குசலே 451.4 புள்ளிகளை எடுத்து 3 ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

  • ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது.

  • ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

  • ஆண்கள் மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் அமன் ஷராவத் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்ட வீரர்கள் :

  • மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், வெண்கல பதக்கத்துக்கான மோதலில் 1 புள்ளியில் மூன்றாம் இடத்தை தவிர விட்டார். இதனால் அவருக்கு 4-ம் இடமே கிடைத்தது.

  • ஆண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அர்ஜூன் பபுதா இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் நான்காம் இடத்தை பிடித்தார்.

  • கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஸ்கீட் சூட்டிங் பிரிவில், அனந்த்ஜீத் - மகேஷ்வரி கூட்டணி நான்காம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது.

  • வில்வித்தையின் கலப்பு இரட்டையர் பிரிவில் தீரஜ் -அங்கிதா இணை வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் அமெரிக்காவிடம் தோல்வியைத் தழுவி நான்காம் இடம் பிடித்தது.

  • பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், லக்சயா சென் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மலேசிய வீரரிடம் தோல்வியைத் தழுவி நான்காம் இடம் பிடித்தார்.

Also Read: "பெண்ணாகப் பிறந்தேன், பெண்ணாகவே வாழ்கிறேன்"- பாலின சர்ச்சை குறித்து இமானே கெலிஃப் பதில் !