Sports

இலங்கையுடனான தோல்வி : "உலகம் அழிந்துவிட்டதுபோல் உணரத் தேவையில்லை"- ரோஹித் சர்மா காட்டம் !

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்படவுள்ள நிலையில் அது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த தொடரில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி வென்றது. அதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை எதிர்கொண்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது./

1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் முறையாக இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழந்த நிலையில், இது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கம்பீர் மேல் விமர்சனமாக மாறியது.

இந்த நிலையில், ஒரு தொடரில் தோற்றதாலேயே உலகம் அழிந்துவிட்டதுபோல் உணரத் தேவையில்லை என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "நங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறோம். அதில் வெற்றி - தோல்விகள் வருவது சாதாரமானது. இந்த ஒரு தொடரை இழந்துவிட்டதால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல.

ஒரு தொடரில் தோற்றதாலேயே உலகம் அழிந்துவிட்டதுபோல் உணரத் தேவையில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில தொடர்களில் தோற்பது விளையாட்டில் சகஜம்தான். தோல்வியிலிருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதுதான் முக்கியம் இந்தத் தோல்வி எங்கள் வீரர்களின் மனதை பாதிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

Also Read: தங்கப்பதக்கம் வென்றார் அல்ஜிரிய வீராங்கனை இமானே கெலிஃப் : பாலின சர்ச்சையில் சிக்கியும் சாதித்து அசத்தல் !