Sports
ஒலிம்பிக் தொடரில் 5 போட்டிகளில் 4-ம் இடம்... மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீரர்கள் யார் யார் ?
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த தொடரில் இந்தியாவின் முதல் பதக்கத்தை 22 வயதான இந்திய வீராங்கனை மனு பாக்கர் வென்று அசத்தினார். மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.
மேலும், துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் வென்றனர். ஆனால், அடுத்து வந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் நெருக்கமாக வந்து பதக்கத்தை தவறவிட்டனர்.
துப்பாக்கி சுடுதல் போட்டியின் 25 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் குரூப் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த மனு பாக்கர், இறுதிசுற்றின் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இறுதிக்கட்டத்தில் சொதப்பிய அவர், வெண்கல பதக்கத்துக்கான மோதலில் 1 புள்ளியில் மூன்றாம் இடத்தை தவிர விட்டார். இதனால் அவருக்கு 4-ம் இடமே கிடைத்தது.
துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அர்ஜூன் பபுதாவும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், இறுதியில் அவரும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் நான்காம் இடத்தை பிடித்தார்.
துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஸ்கீட் சூட்டிங் பிரிவில், அனந்த்ஜீத் - மகேஷ்வரி கூட்டணியும் நான்காம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது.
வில்வித்தையின் கலப்பு இரட்டையர் பிரிவில் தீரஜூம் அங்கிதா இணை வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் அமெரிக்காவிடம் தோல்வியைத் தழுவி நான்காம் இடம் பிடித்தது.
பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், லக்சயா சென் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மலேசிய வீரரிடம் தோல்வியைத் தழுவி நான்காம் இடம் பிடித்தார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!