Sports
"உலகக்கோப்பையில் பும்ராவை சொல்வதை பந்து அப்படியே கேட்டது" - ரவி சாஸ்திரி புகழாரம் !
ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். லிமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
பின்னர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாக செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது.
தொடர்ந்து ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தி, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார். மேலும் டி20 உலகக்கோப்பையிலும் தொடர் நாயகன் விருது பெற்றார்.
இந்த நிலையில், வாசிம் அக்ரம் மற்றும் வாக்கர் யூனுஸ் இருவரும் தங்களின் பவுலிங்கில் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது பும்ரா இருக்கிறார் என இந்திய அணி முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பையில் பும்ராவின் 2 செயல்பாடுகளை கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்திதும், இறுதிப்போட்டியில் யான்சனின் விக்கெட்டை வீழ்த்தியதும் அற்புதமானது.
வாழ்வின் சில நேரங்களில் தான் நம் கையில் உள்ள பந்து நாம் என்ன சொன்னாலும் கேட்கும் என்று சொல்வார்கள். வாசிம் அக்ரம் மற்றும் வாக்கர் யூனுஸ்,ஷேன் வார்னே ஆகியோர் தங்களின் பவுலிங்கில் உச்சத்தில் இருந்த போது, அப்படிதான் பவுலிங் செய்தார்கள். இந்த டி20 உலகக்கோப்பையில் பும்ராவின் செயல்பாடுகள் அவர்களை போல் இருந்தது. பும்ராவை சொல்வதை பந்து அப்படியே கேட்டது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!