Sports

அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா ? - வைரலாகும் தோனியின் பதில் !

இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பையையும் தோனி தலைமையில் வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது.

தற்போது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். அதிலும் அவர் இந்த ஆண்டு விளையாடுவாரா? இல்லையா ? என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில், புதிய விதிமுறைகளை பொருத்தே நான் விளையாடுவது அமையும் என தோனி கூறியுள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, ” வரும் ஐபிஎல் சீசனில் எத்தனை வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்பதைப் பொறுத்தே நான் விளையாடுவது அமையும். தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த முடிவை நாங்கள் அணியின் நன்மையை வைத்தே முடிவு செய்வோம். ஏலத்தில் 4க்கு பதில் 5 முதல் 7 வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதியளித்தால் நான் விளையாடுவேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், " 'THALA FOR A REASON' என்பதை இன்ஸ்டாகிராமை பார்த்து தெரிந்துகொண்டேன். என் ரசிகர்கள் என் மீது வாய்த்த அன்புக்காக நன்றிக்கடன் பட்டுள்ளேன். நான் சமூக வலைதளங்களில் போராடி என்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய அவசியமே எனக்கு ஏற்படவில்லை. எனக்காக எனது ரசிகர்களே போராடுகிறார்கள்" என்று கூறினார்.

Also Read: சென்னை கடற்கரை- பல்லாவரம் சிறப்பு ரயில்கள் : MTC சார்பில் சிறப்பு பேருந்துகள்... முழு விவரம் என்ன ?