Sports

ஆண்களுக்கு இணையாக பெண்கள் பங்களிப்பு : பாலின சமத்துவத்தில் சாதனை படைத்த பாரிஸ் ஒலிம்பிக் !

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வரும் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளஇந்த தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒலிம்பிக் தொடரில் மொத்தமுள்ள வீரர்களில் 50 சதவீதம் பேர் பெண்களாக பதிவாகியுள்ளது பாலின சமத்துவ சாதனையாக உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதாவது இந்த தொடரில் 5,250 ஆண்களும் 5,250 பெண்களும் கலந்துகொள்கின்றனர். 1896-ம் ஆண்டு நவீனகால முதல் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. எனினும் அந்த தொடரில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், பெண்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பின்னர் 1900 -ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் பெண்கள் வீராங்கனைகளின் பங்களிப்பு 2.2 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து வந்த ஒலிம்பிக் தொடர்களில் பெண்களின் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. அது 1988-ம் ஒலிம்பிக் தொடரில் பெண்களின் சதவீதம் 25 % என அதிகரித்தது.

அதன் பின்னர் பெண்களின் பங்களிப்பு அசூர வளர்ச்சி பெற்ற நிலையில், தற்போது பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்கேற்பும் 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு பலரும் இதனை பகிர்ந்து பாலின சமத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: நாளை தொடங்குகிறது ஒலிம்பிக் திருவிழா : பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்கள் யார் யார் ?