Sports
"நடிகைகளுடன் கிசுகிசு வந்தால்தான் அணியில் இடம் கிடைக்கும்" - BCCI குறித்து பத்ரிநாத் அதிருப்தி !
இந்திய அணி வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் செயல்படவுள்ளார்.
அதில் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனாக சூர்யகுமாரும், துணை கேப்டனாக சுப்மான் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஒருநாள் தொடருக்கான அணியை ரோஹித் சர்மா தலைமை தங்கவுள்ள நிலையில், துணை கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த அணியில் ருதுராஜ் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் டி20 தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளார்.அப்படிப்பட்டவரை அணியில் எடுக்காமல் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மான் கில்லை தேர்வு செய்து , அவருக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக்கொண்டால்தான் அணியில் இடம்பெறமுடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அவர், "ருதுராஜ் இந்தியாவுக்காகவும் உள்ளூர் தொடர்களிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டும் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. கடைசி 7 இன்னிங்ஸில் அவர் 71.2 என்ற அபாரமான சராசரியில் 158.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்தும் அவர் தேர்வு செய்யபடாதது மிகப்பெரிய தவறு.
அதோடு கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ருதுராஜ், ரிங்கு போன்ற வீரர்கள் கழற்றி விடுவதை பார்க்கும் போது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமாக உடலில் டாட்டூ குத்திக்கொள்ள வேண்டும். சொந்தப் புகழை பெருமை பேசுவதற்காக பிஆர் ஏஜென்சியை வைத்துக் கொண்டால்தான் அணியில் இடம்கிடைக்குமோ என்று தோன்றுகிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !