Sports

தரவரிசையில் 8-ம் இடம்... இருந்தும் இளம் T20 இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட CSK கேப்டன்- கம்பீர் காரணமா?

வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் செயல்படவுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா இருதரப்புத் தொடருக்காக இலங்கை செல்லும் நிலையில், பயிற்சியாளர் கம்பீர் தலைமையில் அணியில் புதிய அத்தியாயத்தை இந்திய அணி மேற்கொள்கிறது. இந்த தொடருக்கான அணியை இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் டி20 போட்டிகளுக்கான புதிய கேப்டனாக சூர்யகுமாரும், துணை கேப்டனாக சுப்மான் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஒருநாள் தொடருக்கான அணியை ரோஹித் சர்மா தலைமை தங்கவுள்ள நிலையில், துணை கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த அணியில் இந்திய அணியின் முக்கிய வீரரும், சென்னை அணியின் கேப்டனுமான ருதுராஜ் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் டி20 தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளார்.

அப்படிப்பட்டவரை அணியில் எடுக்காமல் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மான் கில்லை தேர்வு செய்து , அவருக்கு துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்று முதல் தொடராக இலங்கை தொடர் திகழும் நிலையில், கம்பீர் தலையீட்டால்தான் ருதுராஜ் அணியில் இடம்பிடிக்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அம்மா உணவகங்களை மேம்படுத்திட ரூ.21 கோடி நிதி : ஆய்வுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!