Sports
"இதுதான் எனது கடைசி யூரோ கோப்பை தொடர்" - ஓய்வு முடிவு குறித்து அறிவித்தார் ரொனால்டோ !
உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர், ஸ்பெயின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட், இத்தாலிய கிளப்பான ஜுவென்டஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடினார்.
இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. அதன்படி தற்போது சவூதி அரேபியாவில் ரொனால்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் சவூதி ப்ரோ லீக்கில் அதிக கோல் அடித்த வீரராவும் ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். தற்போது ஐரோப்பிய அணிகளுக்கு இடையே நடக்கும் யூரோ கோப்பை தொடரில் போர்த்துக்கல் அணிக்கு கேப்டனாக ரொனால்டோ செயல்பட்டு வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான சூப்பர் 16 ஆட்டத்தில் வென்ற போர்த்துக்கல் அணி அடுத்ததாக காலிறுதியில் பிரான்ஸ் அணியை சந்திக்கவுள்ளது. இந்த நிலையில் இதுதான் தனது கடைசி யூரோ தொடர் என ரொனால்டோ அறிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், "இதுதான் எனது கடைசி யூரோ தொடர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்காக நான் கவலைப்படவில்லை. ரசிகர்களைப் பார்க்கும்போது வரும் சந்தோஷம், இதெல்லாம் நெகிழ்ச்சியாக உள்ளது. இது கால்பந்து உலகை விட்டுச் செல்வது பற்றியது அல்ல. இனி நான் செய்வதற்கோ, வெற்றி பெறுவதற்கோ என்ன உள்ளது?" என்று கூறியுள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!