Sports
EURO 2024: அனல்பறந்த இங்கிலாந்து- டென்மார்க் ஆட்டம் : இத்தாலியை வீழ்த்தி ஸ்பெயின் அபாரம் !
கால்பந்தில் உலககோப்பைக்கு பின்னர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என உலககோப்பைகளை வென்ற அணிகள் கலந்துகொள்கின்றன.
மேலும் முக்கிய அணிகளான பெல்ஜியம், போர்த்துக்கல், நெதர்லாந்து, குரோஷியா போன்ற வலுவான அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில்,இங்கிலாந்து அணியும், டென்மார்க் அணியும் மோதின. இதில் ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை ஏற்படுத்தி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 34வது நிமிடத்தில் டென்மார்க்கின் மோர்டன் ஹுல்மண்ட் தனது அணிக்காக கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி பலமுறை டென்மார்க் அணியின் கோல் எல்லையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினாலும் அந்த அணியால் அந்த கோலும் அடிக்க முடியவில்லை.இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு முக்கிய ஆட்டத்தில் வலுவான ஸ்பெயின்- இத்தாலி அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரர் ரிக்கார்ட்டோ கலாபியோரியின் காலில் பந்து பட்டு ஸ்பெனினுக்கு சுய கோலாக மாறியது. இதற்கு பதிலடி கொடுக்க முயன்ற இத்தாலியின் முயற்சி இறுதிவரை பலனளிக்காத நிலையில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!